ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் எதிர்வரும் 9-ந்தேதி வெளியீடு : அமைச்சர் தென்னரசு


தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைந்தது.
7 லட்சத்து 24 ஆயிரத்து 205 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 மாணவிகள். மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் தனியாக 57 ஆயிரத்து 58 பேர் எழுதினார்கள். மொத்தம் 1,890 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் எதிர்வரும் 9-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை வெளியிடப்படும். தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசு தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணைய தளம் எஸ்.எம்.எஸ்., தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் நடைபெற்று வருவதால் பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக