இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின்போது, அந்நாட்டு ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை உறுதிபடுத்தியிருகிறது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழு.
விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, தனக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை பான் கி மூன் நியமித்திருந்தார்.
இலங்கை அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அந்தக் குழு தனது ஆய்வினை முடித்துக் கொண்டு, கடந்த வாரம் பான் கி மூனிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வது என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் திட்டமிட்டிருந்தார்.
இதனிடையே, அந்த அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முன்பு, இலங்கை அரசிடம் அவர் முறைப்படி பகிர்ந்துகொண்டார்.
ஆனால், ஐ.நா.வின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் ஆய்வறிக்கையில் உள்ள பல தகவல்களில் தெளிவில்லை என்றும், அந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
ஆய்வறிக்கை கசிந்தது...
இந்த நிலையில், இலங்கை அரசிடம் அளிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை, கொழும்புவைச் சேர்ந்த 'ஐலேண்ட்' என்ற பத்திரிகை கசிய விட்டுள்ளது.
அதில், இலங்கை ராணுவம் இறுதிக்கட்டப் போரில் குற்றங்களை இழைத்தது முற்றிலும் உண்மையே என அந்த ஆய்வறிக்கை கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது, போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சில தளபதிகளை கொன்றது உள்ளிட்ட விவரமும் அதில் உள்ளது.
அதேவேளையில், இலங்கை அரசின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழு' அளித்த தகவல்களை ஐ.நா. நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக ஐலேண்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை குறை கூறும் வகையிலேயே 'ஐலேண்ட்' பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு மிக நெருக்கமானதும், ஆதரவானதுமாக பரவலாக அறியப்படும் 'ஐலேண்ட்' நாளிதழ் உள்நோக்கத்துடன் தான் ஐ.நா. நிபுணர் குழு ஆய்வறிக்கையின் சில பகுதிகளை கசியவிட்டு, அந்த அறிக்கையை குறைகூறியிருக்கிறது என்ற கருத்தும் அழுத்தமாக நிலவுகிறது.
இந்தச் சூழலில், இலங்கை அரசின் போக்கினால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், தான் நியமித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை வரும் 18-ம் தேதி மக்கள் முன்பு பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- பத்திரிக்கை செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக