இதில் கலந்து கொண்ட பக்தர்களிடம் நீலகிரி மாவட்ட இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த செல்வக்குமார், விஜயக்குமார், சதீஷ்குமார் மற்றும் சிலர் நோட்டீசு வழங்கி கொண்டு இருந்தனர்.
அந்த நோட்டீசு, கடந்த டிசம்பர் மாதம் அய்யப்பன் சாமி ஊர்வலத்தில் யானை கொண்டு வர போலீசார் அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை அறிந்த ஊட்டி நகர போலீசார் விரைந்து சென்று இந்து முன்னணியை சேர்ந்த விஜயகுமார், செல்வக்குமார், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.
சிந்திக்கவும்: இந்து முன்னணி! எப்படி தங்கள் இயக்கத்திற்கு ஆள் பிடிகிறது என்பதை இந்த செய்தியை பார்த்தவுடன் புரிந்துவிடும். போலீஸ் யானையை கொண்டு வரகூடாது என்று சொல்வது உங்கள் நலன் கருதிதான்.
எத்தனை ஊர்வலங்களில் யானை மதம் கொண்டு பொதுமக்களை மிதித்து பலியாக்கி இருக்கு. சரி உங்களுக்கு யானையை கொண்டு வரவேண்டும் என்றால்? அதை அடுத்த முறை சட்டப்படி கொண்டு வர உயர் அதிகாரிகளை போயி பாருங்கள்.
ஏம்பா? போனவருசம் நடந்த பிரச்னைக்கு இந்தவருடம் அதுவும் மக்கள் கோவில் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருக்கும் பொது அங்கு போயி நோட்டீசு அது இதுன்னு குழப்பம் பண்ணிக்கிட்டு. அட போங்கடா! உங்கள் கடமை உணர்வு புல்லரிக்குது.
அட! நீங்கள் இதற்கே இப்படி பிரச்சனை பண்ணுறீங்களே! நீங்கள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்களை என்ன? பாடுபடுத்தியிருப்பீர்கள் என்பதை இப்ப புரிந்து கொள்ள முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக