எகிப்து நாட்டில் தேர்தல் நடத்த உதவுவதற்காக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று எகிப்து செல்கிறது.
எகிப்து நாட்டில் ஹோசினி முபாரக் நீண்ட காலமாக அதிபராக இருந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டம் தொடங்கியதை தொடர்ந்து அவர் பதவி விலகி விட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தேர்தலை நடத்த உதவு வதற்காக இந்திய தேர்தல் ஆணையக் குழு அங்கு செல்கிறது.
இது பற்றி, தேர்தல் ஆணைய டைரக்டர் ஜெனரல் அக்சய் ரவூத் நேற்று கூறியதாவது:
எகிப்து நாட்டில் தேர்தல் நடத்துவதற்கு உதவும்படி அந்த நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. அந்த கோரிக்கையை மத்திய அரசு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. இதை ஏற்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தலைமையில் 3 பேர் அடங்கிய குழு எகிப்து நாட்டிற்கு 19ஆம் தேதி புறப்பட்டு செல்கிறது. அங்கு 3 நாள்கள் தங்கி, மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று அந்த நாட்டு அதிகாரிகளுக்கு இந்தக் குழு பயிற்சி அளிக்கும்.
-இவ்வாறு அக்சய் ரவூத் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக