ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை செல்வதை விட ?


தமிழகத்தில் அகதிகள் முகாமில் இருப்பவர்கள், இலங்கை செல்வதை விட இங்கேயே இருக்க விரும்புவதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அகதிகளாக தமிழகம் வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அங்கு செல்வதற்கு அகதிகளின் விருப்பம் குறித்து சர்வே எடுக்கப்பட்டது.இதில் அவர்கள் தமிழகத்தில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இலங்கை செல்லவும், அங்கு உறவினர்களுடன் வசிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் வெளியில் சென்று வேலை செய்கின்றனர். அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது.இந்நிலையில், சமீபத்தில் நடந்த சர்வேயில் இலங்கை செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் வசிப்பதையே விரும்புகின்றனர். முகாம்களில் சாக்கடை வசதி, தெரு விளக்கு, குடிநீர் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக