ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிமுக சார்பில் வடிவேலுவிற்கு எதிராக சிங்கமுத்து பிரசாரம்!!


#

திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 8ம் நாள் பிரச்சாரத்தை தொடங்க சென்னையில் இருந்து புறப்பட்டார்.   அப்போது நடிகர் சிங்கமுத்து ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக உறுதி கூறினார்.

 நடிகர்கள் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இருக்கும் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.   இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் களமாக அமைகிறது இந்த தேர்தல்.


திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு,    ஜெயலலிதாவையும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாக்கு தாக்குன்னு தாக்கி பேசி வருகிறார்.


இந்நிலையில் வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்துதான் சரியான ஆள் என்று முடிவு அவர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.     ஓரிரு நாளில் சிங்கமுத்து  பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.    



வடிவேலுவின்  இன்னொரு முகத்தை  தோலுறித்து காட்டப்போகிறேன் என்று  பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் சிங்கமுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக