ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலவச திட்டங்கள் தி.மு.க., அரசுக்கு கைகொடுக்குமா ?

 
ந்து ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசுக்கு கைகொடுக்குமா ?
கர்ப்புறங்களில் தீவிரப்படுத்திய திட்டங்களை, கிராமப்புறங்களில் கட்சியினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். விரைவில் வெளியாகும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பல கவர்ச்சிகர சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

னைத்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள அ.தி.மு.க.,வும், மக்களுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.

டந்த, 2006 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின், 7,000 கோடி கடன் தள்ளுபடி, இரண்டு ஏக்கர் இலவச நிலம், வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, இலவச காஸ் அடுப்பு, இலவச கலர் "டிவி' உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது. 

தவியேற்றதும் முதல்வரின் இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.சலுகைகள் கவர்ச்சிகரமாக இருந்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது. இருப்பினும், ஒரு சாரர் மட்டுமே பயன்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

காலப்போக்கில், திட்டங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. இரண்டு ஏக்கர் நிலம், பெரும்பாலும் கரட்டு புறம்போக்கில் வழங்கப்பட்டதால், அவை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசு புறம்போக்கு நிலம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. தி.மு.க.,வினர் பலர் அவற்றை ஆக்கிரமிக்கும் சூழலும் ஏற்பட்டது.

ரு ரூபாய்க்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோழிப்பண்ணைக்கும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச, "டிவி'க்கள் கடைகளில் வைக்கப்பட்டன. இலவச காஸ் அடுப்பு திட்டத்திலும், கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி பலவற்றை சுருட்டி விட்டதாக புகார் உள்ளது.

கர்ப்புறங்களை மையப்படுத்திய கட்சியினர், கிராமப்புற மக்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலானோருக்கு, காஸ் அடுப்பு, "டிவி' போன்றவை இதுவரை வழங்கப்படவில்லை. டோக்கன் சிஸ்டமும் தோல்வியில் முடிந்துள்ளது.

லைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அலைக்கழிக்கும் போக்கும், பணம் பிடுங்கும் செயலும் அதிகம் அரங்கேறியது. காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்காததால், அவசர சிகிச்சை மேற்கொள்வோர், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது. 

தேர்தல் நெருங்க நெருங்க இலவச திட்டங்களில், அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பால், கலைஞர் வீட்டு வசதித் திட்டமும் கிடப்பில் உள்ளது. அடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வராவிட்டால், இலவசங்களை நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

தி.மு.க., சார்பில், வரும் 19ம் தேதி வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், கடந்த தேர்தலை போல் கவர்ச்சிகர திட்டங்கள் பல அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மாதம் 20 கிலோ அரிசி இலவசம் என்ற, "பிரம்மாஸ்திரம்' போன்ற அறிவிப்பும் இடம்பெறும் என, கட்சியினர் பேசி வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையை, தி.மு.க., பிரசாரத்தில் தீவிரப்படுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.விவசாயிகள், பால் உற்பத்தியாளர், ஜாதி சங்கத்தினர் என, பல்வேறு அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களை குளிர்விக்கும் வகையில், சலுகை அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. இவை, வரும் தேர்தலில் தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க உதவுமா என்பது தான், தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக