ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வீடியோ - பெங்காஷி வான் பரப்பில் பிரான்ஸ், கனடா ஜெட் விமானங்கள் : லிபியா மீது போர் அறிவிப்பு


லிபியாவின் புரட்சிக்குழுவினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மிக முக்கிய நகரமான பெங்காஷியை விடுவிக்க
கடாபி இராணுவம் படையெடுப்பு நடத்த தொடங்கியதை அடுத்து, கடாபிக்கு எதிராக இராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகள் தீர்மானித்துள்ளன. பாரிஸில் சார்கோஸியுடன் சர்வதேச நாட்டுத்தலைவர்கள் நடத்திய அவசர சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
'காத்திருந்த தருணம் வந்துவிட்டது' என கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஷி, தன் நாட்டு ஜெட் போர் விமானங்கள் லிபிய வான்பரைப்பை சென்றடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.


எமது நோக்கம் பெங்காஷியில், கடாபி இராணுவம் ஷெல் வீச்சு நடத்துவதை தடுப்பதே என சார்கோசி கூறியுள்ளார். லிபியாவின் வான் பரப்பில் அவர்களது சொந்த போர் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதாக ஐ.நா சபை கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
இவ் அறிவிப்பை மீறி, பெங்காஷி நகர் மீது கடாபி இராணுவம் ஜெட் தாக்குதலை தொடங்கியதால், உடனடியாக அதை தடுக்கும் முகமாக பிரான்ஸ் விமானங்கள் அங்கு விரைந்துள்ளன.

நேற்று கடாபி திடீர் யுத்த நிறுத்த அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்த போதும், அதை நம்ப போவதில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் பெங்காஷியின் வடக்கு, கிழக்கு பகுதிகள் மீது கடாபி இராணுவம் ஷெல் வீச்சு தாக்குதலை தொடங்கியுள்ளது.
புரட்சிக்குழுவும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. கடாபியின் ஜெட் விமானம் ஒன்றை அவர்கள் சுட்டுவீழ்த்தும் காட்சிபுகைப்படமும் வெளியாகியுள்ளது.
கடாபி இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தும் வீடியோ பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக