ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம்!

தவறான முறையில் வரிவிலக்குப் பெற்ற இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. இத்தகவல் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனம் இன்போஸிஸ். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தங்கள் ஊழியர்களை குறுகிய கால பணிக்காக அனுப்பி வைக்கிறது இந்நிறுவனம் (ஆன்ஷோர்). இந்த வகையில், கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ 657.81 கோடி இன்போஸிஸ் நிறுவனத்துக்கு வருவாயாக வந்துள்ளது. அதை ரூ 456.38 கோடியாக குறைத்துக் காட்டியுள்ளனர். இதனை ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயாகக் காட்டி வரிவிலக்குப் பெற முயன்றுள்ளது இந்நிறுவனம்.
"ஆன்ஷோர் பணிகள் மூலம் பெறப்படும் வருமானம் வரிவிலக்கின் கீழ் வராது. இது வர்த்தக ஏற்றுமதிப் பிரிவிலும் சேராது" என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக மக்களவையில் தெரிவித்தார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கம். இதனால் இன்போஸிஸ் நிறுவனத்துக்கு ரூ 450 கோடியை அபராதமாக விதித்துள்ளது வருமான வரித்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக