ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு! ஏப்ரல் 13 அன்று நடைபெறும்!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய தேர்தல் ஆணையம் தலைவர் எஸ்.ஒய்.குரைஷி புது டில்லியில் இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டார்.
அதன்படி சட்டசபைக்கான தேர்தல் தமிழகத்தில், புதுச்சேரியில், கேரளாவில் ஏப்ரல் 13 அன்றும், அஸ்ஸாமில் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11 அன்றும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 27, மே 3, மே 7, மே 10 அன்றும் நடைபெறும்.


மே 13 அன்று அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 4.59 கோடி வாக்காளர்கள், ஏறத்தாழ 54,000 வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்கினை வழங்குவர். தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு மார்ச் 19 அன்று வெளியிடப்படு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக