சென்னையில் தேனாம்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், தியாகராயர்நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சில்லைறை விற்பனை கடைகளில் கடந்த வாரம் வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும் விலை குறைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கிருந்து சென்னைக்கு வரும் காய்கறி வரத்து பாதியாக குறைந்துள்ளது.
இதனால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் தக்காளி விலை கிலோவுக்கு 5 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கத்திரிக்காய் விலையும் கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் காய்கறி வாங்குவதை பாதியாக குறைத்துக் கொண்டுள்ளதாக குடும்பத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், ஒரு முருங்கைக்காய் விலை 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த காய்களையும் வாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பூண்டு விலை கிலோ 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு பூண்டு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிய வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக