ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயருகிறது

சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகச் செயலர் எஸ்.சுந்தரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டாலராக உயர்துள்ளதால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் விலை, இறக்குமதி விலையை விடக் குறைவாக விற்பனை செய்யப்படுவதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் சமையல் எரிவாயு விலை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்று கூறினார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக