ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2011-இல் 25 காசு நாணயம் செல்லாது

2011-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ந் தேதி முதல் 25 காசு மற்றும் அதன் கீழ் புழக்கத்தில் உள்ள 3 வகை நாணயங்கள் செல்லாது.

ஜுன் 30-ந் தேதிக்கு பின் குறைந்த பட்ச செல்லத்தக்க நாணயம் 50 காசாக இருக்கும். நடைமுறையில் வரி மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றில் கடைசி செல்லத்தக்க பணம் 50 காசாக கருதப்படும்.

அல்லது அதை முழுமையாக்கி ஒரு ரூபாயாக கணக்கிடப்படும். மேற்கண்ட தகவலை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுபற்றிய முறையான அறிவிப்பை ரிசர்வ் வங்கியும் வெளியிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக