ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பொதுமக்கள் போலீஸை துரத்தும் காலம் டோ !




பொதுமக்களை போலீஸ் துரத்திய காலம் போய், பொதுமக்கள் போலீஸை துரத்தும் காலம் இது. ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில், காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினரை துரத்த, பாவம் போலீஸ் தலைதெறிக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீஸ் உரசப் போனதில், நிலவரம், கலவரமாகி ஓடும் நிலை ஏற்பட்டது.


இந்த போட்டோவை பார்த்தவுடன் எமக்கு எழுந்த இரண்டு கேள்விகள்.

1) ஓடும் போலீஸை முந்திக்கொண்டு ஓடும் வெள்ளைச் சட்டை ஆசாமி யார் ? டி.ஐ.ஜி.யா ?
2) கலகம் அடக்கும் பொலிஸ் யூனிபோமில் இருக்காங்களே ? ஏன் இப்படி தலை தெறிக்க ஓடவேனும் ?
3) எங்கவரைக்கும் ஓடி இருப்பாங்க ? எங்க போய் தான் ஓட்டம் நின்றிருக்கும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக