ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரிட்டனில் கருப்பாக மாற ஊசி போட்ட பெண் மரணம் !


இந்தியா போன்ற நாடுகளில் தங்கள் மேனியை வெள்ளை நிறமாக மாற்ற பலர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பிரிட்டனில் உள்ளவர்கள் தங்களது தோலின் வெண்மை நிறத்தை மாற்றி சற்று பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாற்ற மருந்துகள், ஊசிகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதால் இந்த ஊசிமருந்து சட்ட அனுமதி பெறாதது. ஆனால் இணையதளத்தின் மூலமாக இதற்கு விளம்பரம் தரப்படுகிறது.
பிரிட்டனின் போல்ட்டன் நகரைச் சேர்ந்த ஜென்னா விக்கெர்ஸ் என்ற 26 வயதுப் பெண் கடந்த வாரம் மெலனோட்டான் என்ற ஊசி மருந்தை உடம்பில் ஏற்றிக்கொள்ள வந்த இடத்தில் ஊசி போட்டவுடனே சுருண்டு விழுந்து இறந்தார்.

பகிர்தளத்தில் இவர் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டதனால் தன் மேனி நிறம் மாறி அழகாகி விட்டதாகவும், எவ்விதப் பின்விளைவுகளும் இல்லை என்றும் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் இந்த மெலனோட்டன் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயற்கை சுரப்பு மருந்தாகும். உடம்பில் மெலனின் சுரப்பைத் தூண்டுகிறது. கதிரவனின் கதிர்வீச்சிலிருந்து தோலைப் பாதுகாக்கிறது. மேனி வண்ணத்தை வெள்ளையிலிருந்து பழுப்பாக மாற்றுகிறது.
ஆயினும் இந்த மருந்துக்கு மோசமான பின்விளைவுகள் இருப்பதால் இதற்கு சட்ட அனுமதி கிடைக்கவில்லை. எனவே இந்த மருந்தை எவரும் விற்பது சட்டப்படி குற்றமாகும்.
ஜென்னா விக்கெர்ஸின் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்ததால் அவள் தன்னை அழகுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஊசியைப் போட்டிருக்கிறாள்.
கிரேட் மேன்சாஸ்டர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜென்னாவின் திடீர் மரணம் குறித்து அறிவதற்காக அவரது உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக