செத்த ஆண் ஒருவர் உயிரோடு மீண்டு வந்து நேசத்துக்கு உரிய பெண்ணிடம் அதிரடியாக காதலை சொன்ன சினிமாப் பாணி அதிசயம் ரஷியாவில் இடம்பெற்று உள்ளது.
இவர் உண்மையில் இறந்து இருக்கவில்லை. காதலை சொல்கின்றமைக்காக இறந்தவர் போல் நடித்து இருக்கின்றார். பயங்கரமான கார் விபத்து ஒன்றில் மாண்டு விட்டார் என்பது போன்ற சூழலை திட்டமிட்டு ஏற்படுத்தி இருந்தார். இதற்காக திரைப்பட இயக்குனரும், மேக் அப் கலைஞருமான ஒருவரின் உதவியை பெற்று இருந்தார்.
இந்த செட் அப் எல்லாம் பெண்ணுக்கு தெரியாது. அன்புக்கு உரியவரை வழமையாக சந்திக்கின்ற அந்த இடத்துக்கு வந்து இருந்தார். ஆனால் விபத்தால் ஏற்பட்டு இருக்கக் கூடிய மரண காட்சியை அங்கு கண்டார். கார்கள் சேதம் அடைந்து காணப்பட்டன. அம்புலன்ஸ் வண்டிகள் அருகில் நின்றன. இவரின் அன்புக்கு உரியவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
கார் விபத்தில் இவரின் அன்புக்கு உரியவர் செத்துக் கிடக்கின்றார் என்று முதலுதவிச் சிகிச்சையாளர் பெண்ணுக்கு சொன்னார். பெண் கதறி அழுது குழறினார். சோகத்தின் உச்சத்துக்கே போய் விட்டார்.
உச்சக் கட்டத்தில் ஆணின் நடிப்பு முடிவுக்கு வந்தது. நேசத்துக்கு உரியவள் முன் திடீரென்று முன்னால் வந்து நின்றார்.
ஆரம்பத்தில் பெண்ணுக்கு பேரதிர்ச்சி கலந்த கோபம். காதலனை கொலை செய்கின்ற அளவுக்கு இக்கோபம் வந்து இருந்தது. பின் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். காதலை சொன்னார் ஆண்.
இப்பெண்ணின் காதலின் ஆழத்தை அறிய விரும்பியே இவ்வாறு செய்தார் என்று ஊடகங்களுக்கு ஆண் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக