ஊட்டி மலைப்பகுதியில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை காய்கறி விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு கோடை மழை போதுமான அளவுபெய்யவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்து பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால் உற்பத்தி குறைந்து மலைக் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஊட்டியைச் சேர்ந்த மொத்த வியாபாரி ரியாஸ் கூறுகையில்; இந்த ஆண்டு ஊட்டியில் போதியமழை இல்லை. அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படும். பச்சை மிளகாய் அவரை ஆகியவற்றின் மகசூல் குறைந்துள்ளது. பச்சைமிளகாய் கிலோ ரூபா 80 முதல் ரூபா 100வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருபச்சை மிளகாயை ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. கிராமங்களில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் செய்கின்றனர். மழையும் சரியாகப் பெய்யவில்லை. இதனால் தான் காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக