விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் வரையில் யாழ்.நகருக்குள் 10 ஆயிரம் வாகனங்கள் நுழைந்துள்ளன.
இந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததற்கு பாடசாலை விடுமுறை, நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா என்பனவே காரணம் என்று சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் காரைநகர் கசூரினா கடற்கரை, கீரிமலை, யாழ் நூலகம். யாழ்.கோட்டை, யாழ்.தொடருந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு விரும்புகின்றனர் என்றும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ள 31,500 பேர் இந்த ஆண்டில் மட்டும் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக