கொளுத்திய கோடை காலம் போய் மெல்ல மெல்ல பருவமழை எட்டிப்பார்க்கிறது. ஆங்காங்கே தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரின் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை வரவழைக்கும். எனவே பருவமழை காலத்தில் தாக்கத் தொடங்கும் நோய்களைப் பற்றியும் அவைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எவ்வாறு என்பது பற்றியும் மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
பூஞ்சைத் தொற்று
மழையில் நனைவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் மழைக்காலத்தில் மழையில் நனைவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஈரமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஈரத் துணிகளில் இருந்து நம் உடலில் ஃபங்கஸ் எனும் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகளும் இருக்கின்றன. தலைமுடி ஈரமாக இருந்தால், தலையில் நீர் கோர்த்து சைனஸ் வருவதற்கு வாய்ப்புண்டு.
நிமோனியா காய்ச்சல்
மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்க் காடாகவே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இந்த வைரஸ் நோய்க்கிருமிகளும் முதலில் வயதானவர்களையும், குழந்தைகளையும் தாக்கும். அதேபோல ஏற்கனவே நோயுற்றிருப்பவர்-களிடமும் தன் கைவரிசையைக் காட்டும். இவை தாக்கிய பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை கவனிக்காமல் விட்டு-விட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும்- அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தாலே மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
மலேரியா காய்ச்சல்
மழைக்காலத்தில் காய்ச்சல் எல்லோரையும் ஒய்வு எடுக்கவைக்கும் கொஞ்சம் அசந்தால் ஆளையே படுக்கவைத்துவிடும் காய்ச்சல் வந்த உடனே உணவு திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது உணவு மறுத்தல் செய்யலாம். இந்நேரங்களில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டிய நீரையே பயன்படுத்த வேண்டும் உணவுப் பிரியர்கள் எனின் காரம் இல்லாமல் மிளகு போட்டு காய்ச்சிய அரிசி கஞ்சி எடுக்கலாம் அப்படி இரண்டு நாளைக்கு எடுக்க காய்ச்சல் போயே போச்சு
இந்த காய்ச்சலுக்கு பின் எளிமையான உணவுத் திட்டம் தேவை காரத்தையும் புளியையும் குறைக்க வேண்டும். மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான். இந்த நோய் வந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு மூட்டு வலி இருக்கும்.
எலிக்காய்ச்சல்
ஹெப்படிடிஸ் ஏ வகை வைரஸ் கிருமி முதலில் ஈரலைத் தாக்கி, மஞ்சள் காமாலை வருவதற்கு வழி செய்யும். இந்த வைரஸ் கிருமி மல ஜலத்திலிருந்து பரவும். ஹெப்படிடிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது. இதனை எலிக் காய்ச்சல் என்று கூறுவார்கள். பாதாள சாக்கடையில்தான் எலிகள் அதிகம் இருக்கின்றன. இந்த எலிகளைத் தாக்கும் பாக்டீரியா கிருமிகள் எலியின் சிறுநீர் வழியாக வெளியேறும். அந்தச் சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மழைக்காலத்தில் தண்ணீரில் கலந்துவிடும். இதனால்தான் எலிக் காய்ச்சல் வருகிறது. இந்தக் காய்ச்சல் உயிரையே பலிவாங்கக்கூடியது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜுரம், மூட்டு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகள்.
அச்சுறுத்தும் ஆஸ்துமா
ஆஸ்துமா நோய் எல்லாகாலத்திலும் சிரமத்தை தரும் என்றாலும் மழைக்காலம்,பனிக்காலம் என்றால் கூடுதல் அவஸ்தையை தரும். இந்த நோய் கண்டவர்கள் குளிர்ச்சியைத் தரும் உணவுகளை நீக்கவேண்டும் சில குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை கண்டிப்பாக நீக்கவேண்டும் இவர்கள் நாட்டு கத்தரி ,சுண்டைக்காய் , அவரைகாய்,முருங்கை காய் போன்ற நாட்டுவகை காய்களை எடுக்கலாம். தூதுவலை, கண்டங் கத்தரி, நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இவர்களுக்கு ஏற்றது. இனிப்பும் புளிப்பும், உப்பும் கபத்தை வளர்க்கும் ஆகையால் இந்த உணவுகளை நீக்கவேண்டும்.
மழைக்காலம், வெயில் காலம் என்று எந்தக் காலமாக இருந்தாலும் நம்மையும் நாம் சார்ந்த இடத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டாலே போதும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மட்டுமே வடிகட்டி குடிக்கவேண்டும். மினரல் வாட்டர்தானே என பலர் கேன்களில் வாங்குகிற தண்ணீரைக் காய்ச்சாமலேயே குடிக்கிறார்கள். அந்தத் தண்ணீர் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. அதோடு அந்தக் கேன்களை சுத்தம் செய்கிறார்களா என்றும் தெரியாது. பொதுவாக ஒருமுறை பயன்படுத்தியதுமே தூக்கி எறியக்கூடிய வகையில்தான் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிப்பதுதான் நல்லது. எப்போதும் சுத்தமான உணவுகளைச் சாப்பிடுவதுடன் தெருக்களில் விற்கும் ஜூஸ், பொரித்த உணவுகள், ஓட்டல் சாப்பாடு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக