ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

என்ன நடந்தது உசேன் போல்டுக்கு? 200 மீட்டர் போட்டியிலும் ஜமைக்காவின் யோகனிடம் அதிர்ச்சி தோல்வி (வீடியோ இணைப்பு)


உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட், ஜமைக்காவின் ஒலிம்பிக் தெரிவுப் போட்டிகளில் மீண்டுமொருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளார். 100 மீற்றர் ஓட்டத்தில் முன்னர் தோற்கடிக்கப்பட்டிருந்த அவர், தற்போது 200 மீற்றர் ஓட்டத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்காவின் வீரர்களைத் தெரிவதற்கான ஓட்டப் போட்டிகளிலேயே உசைன் போல்ட் தோற்கடிக்கப்பட்டுள்ளார். உசைன் போல்டை 100 மீற்றர் போட்டிகளில் தோற்கடித்த யொஹான் பிளேக் என்ற வீரரே அவரை 200 மீற்றர் போட்டிகளிலும் தோற்கடித்துள்ளார்.
200 மீற்றர் ஓட்டத்தை 19.80 செக்கன்களில் ஓடி முடித்த யொஹான் பிளேக் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். 19.83 செக்கன்களில் ஓடி முடித்த உசைன் போல்ட் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். மூன்றாவது இடத்தை 20.03 செக்கன்களில் ஓடி முடித்த வரென் வெய்ர் பெற்றுக் கொண்டார்.
போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த உசைன் போல்ட், நிரூபிக்க வேண்டிய தேவை தனக்குள்ளதாகத் தெரிவித்தார். தான் ஒலிம்பிக் சம்பியனாகக் காணப்படுகிறேன் எனத் தெரிவித்த அவர், தான் இன்னமும் உலகின் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இரண்டாமிடம் பெற்றுக் கொண்டமை தொடர்பாக கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எங்கு பிழை நடந்தது என்பது தொடர்பாக ஆராய வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பாக தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்த உசைன் போல்ட்டின் பயிற்றுவிப்பாளர், உசைன் போல்ட் இன்னமும் 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லை எனவும், அவர் அது தொடர்பாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக