நிரோமி டி சொய்சா என்ற முன்னாள் பெண் போராளி எழுதியுள்ள 308 பக்கங்களைக் கொண்ட ‘ரமிழ் ரைகஸ் (Tamil Tigress) என்ற புத்தகத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களையும் அவர் விபரித்துள்ளார்.
இந்தநிலையில், உளவாளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போரளிகள் படுகொலை செய்ததுடன், தமிழர்களின் வர்த்தக நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களையும் மேற்கொண்டதாக நிரோமி டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதி காக்கும் துருப்பினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு தமது 17 வயதில் நிரோமி டி சொய்சா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நிரோமி டி சொய்சா தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
வன்முறைகளால் தமிழீழ கோரிக்கையை அடைய முடியாது என அறிந்து கொண்டதன் பின்னர் தாம் இயக்கத்திலிருந்து விலகியதாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய படையினருக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகளின் இளம் உறுப்பினர் ஒருவரை சிரேஸ்ட உறுப்பினர்கள் சித்திரவதை செய்ததனை தாம் நேரில் கண்டதாக கூறும் அவர், சிறு பூச்சியை கொல்வது போன்று அந்த இளைஞரை புலிகள் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
சக பெண் போராளி ஒருவரை காதலித்த இளைஞர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையினருடன் மோதல்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததாகவும் அவர்
தனது நூலில் தெரிவித்துள்ளார்.
தனது நூலில் தெரிவித்துள்ளார்.
'இலங்கையின் மோசமான சிவில் யுத்தத்தில் ஒரு சிறுவர் போராளியான எனது கதை' என்ற வாசகம் நூலின் முன்பக்க அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை எழுதியவர் நிரோமி டீ சொய்சா என்று சிங்களப் பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புனைபெயர் என்று பிரபல அரசியல், ஆயுதப்போராட்ட விமர்சகரான டி.பி.எஸ்.ஜெயராஜ் கூறுகிறார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் மனித உரிமைப் போராளியுமான ரிச்சர்ட் டீ சொய்சாவை நினைவுகூரும் வகையில் நிரோமி என்ற சிங்களப் பெயருடன் டீ சொய்சாவையும் சேர்த்து நிரோமி டீ சொய்சா என்று புனைபெயர் இடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ்.
ஆனால் இதை எழுதியவர் ஒரு தமிழ்ப் பெண் புலி எனவும்,
இவரது தந்தை கத்தோலிக்க மதத்தை உடையவர். தெல்லிப்பளை வீமன்காமத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்றவர். பொறியியலாளராக இலங்கை மின்சார சபையில் கடமையாற்றி, மலையகத்தில் இந்திய வம்சாவழி பெண்ணொருவரை திருமணம் செய்தவர்.
இவர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும், சேனுகா என்ற இயக்கப் பெயருடன் விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பில் இருந்ததாகவும், தன் நெருங்கிய தோழி அஜந்தி எனவும் குறிப்பிட்டிருந்தார். ஒரேயொரு தடவை தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும் மேலும் ஜெயராஜ் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக