ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? உங்கள் நேரத்தை பணமாக்கும் கில்லாடிகள்.

நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள். 

1. முதலில்https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும். 

2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும். 


3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும். 


இதில் 284 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது  பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து  மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 259$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $. 
 
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை இந்தப் படத்தில் காணலாம். Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக