ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2012 லண்டன் ஒலிம்பிக்களில் இதுவரை இல்லாதவாறு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது ஒலிம்பிக் உள்ளக மற்றும் வெளியக அரங்கு..(அசத்தல் படங்கள் இணைப்பு)


லண்டனில் ஜூலை மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக விளையாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஒலிம்பிக் பூங்காவில் 5 அரங்குகள் தயாராகின்றன.

இதில் ஒரு அரங்கமாக சைக்கிள் போட்டிக்கான வேலோட்ரோடு அரங்கு தயார் ஆகியுள்ளது. செவ்வாயன்று திறப்பு காணும் இந்த அரங்கம் ஆயிரம் பார்வையாளர்கள் இருக்கையை கொண்டது. இங்கு ஒலிம்பிக் போட்டிகளும், உடல் ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டிகளும் இடம் பெறுகின்றன.
கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சைக்கிளிங்கில் 3 தங்கபதக்கம் பெற்ற சர்கிறிஸ் ஹோய் இந்த அரங்கம் அமைப்பதற்கான வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார். இந்த சைக்கிள் அரங்கானது உலகின் தலைசிறந்த விளையாட்டு அரங்குகளில் ஒன்றாக இருக்கும்.
இதை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் கிராண்ட் அசோசியேஷன் நிபுணர் குழுவினர் அமைத்துள்ளனர். 2007 ம் ஆண்டு வடிவமைப்பு போட்டியில் இந்த நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக