ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆங்கிரி பேர்ட்ஸை தொடர்ந்து ரோவியோவின் புதிய கேம்!

Angry Birds Makers to Launch Amazing Alex for iOS, Androidஅட! விளையாட்டினை விரும்பும் பெரியவர்களுக்கும் சரி, சுட்டிகளுக்கும் சரி அமேஸிங் அலெக்ஸ் என்ற புதிய கேமினை அறிமுகம் செய்ய உள்ளது ஆங்கிரி பேர்ட்ஸை உருவாக்கிய ரோவியோ நிறுவனம்.

அதுவும் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இந்த கேமினை வழங்க உள்ளது ரோவியோ நிறுவனம். ரோவியோ நிறுவனத்தின் புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ் ஒரு குட்டி பையனை சுற்றி அமைக்கபட்டுள்ள ஒரு கதையாக உள்ளது.
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு எந்த அளவு மக்களின் ஆர்வத்தினை தூண்டியதோ அதே போல் இந்த புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ், கேமிங் உலகத்தில் புதிய ஆரவாரத்தினை ஏற்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம். இது போல் அமேஸிங் அலெக்ஸ் கேம் புதிய சாதனையை செய்ய உள்ளது.
கொஞ்சம் காத்திருங்கள் இந்த விளையாட்டில் வரும் குட்டி பையன் கூடிய விரைவில் எல்லோரது எலக்ட்ரானிக் சாதனங்களிலும் காட்சி அளிக்க போகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக