ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவப்பட்ட காஷ்மீரிகள்..


குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!


புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;

மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக