முதல்வர் ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டதன்படி, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷயம், தமிழக அரசை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வழக்கு காரணமாக, புதிய மருத்துவ மனையின் மாதிரி வரைபடம் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய நிலை வரலாம் என்கின்றன சட்டத்துறை வட்டாரங்கள்.
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்று அறிவித்திருந்தாரே தவிர, அதற்கான திட்டமிடல்கள் ஏதும் பைனலைஸ் இன்றைய தேதிவரை பண்ணப்படவில்லை என்றே தலைமைச் செயலகத்தில் கூறப்படுகின்றது.
“மாற்றம் செய்வது சாத்தியம்தான்” என்ற வாய்மொழி ஆலோசனையை வைத்தே முதல்வர், தனது அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
வக்கீல் ஆர். வீரமணி என்பவர் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தத் திட்டத்துக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “மருத்துவமனைக்கு ஏற்ப அந்த கட்டடத்தின் வடிவமைப்பை மாற்ற வேண்டுமானால், கட்டடத்தின் 60% பகுதியை இடிக்க வேண்டியிருக்கும்” என்று அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதை சாலஞ்ச் பண்ணுமா என்பது சந்தேகமே. காரணம், தாக்கல் செய்யப்பட்ட குறித்து, அரசிடம் கருத்து கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க, செப்டம்பர் 9ம் தேதி வரையே நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இப்படியான பெரியதொரு திட்டத்துக்கு முதல்நிலை வரைபு தயாரிப்பதற்கே சில மாதங்கள் பிடிக்கும்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிலுள்ள மற்றொரு விஷயம், புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திலேயே அரசு தலைமைப் பொது மருத்துவமனை உள்ளது என்பது! குறுகிய தொலைவில் இரு பெரிய மருத்துவமனைகள் தேவையா என்ற கேள்வியை இது எழுப்பிவிடும்.
அதே நேரத்தில், அரசு தலைமைப் பொது மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஒன்றும் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளது. அந்த மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்காக அதன் அருகிலேயே மத்திய சிறை இருந்த இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் செலவிடும் பணத்தின் சிறிய பகுதியை வைத்தே, அந்தத் திட்டத்தை நிறைவேற்றி விடலாம்.
முதல்வரின் புதிய மருத்துவமனை அறிவிப்பை கலைஞர் (வேறு வழியில்லாமல்?) வரவேற்றுள்ள போதிலும், நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்குகிறது தமிழக அரசு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக