ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், தூக்குத் தண்டனையை 11 ஆண்டு காலமாக நிறைவேற்றாமல் காலம் கடத்தியதற்கு தி.மு.க.தான் காரணம் என்று கூறியுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. “இதை நான் கூறவில்லை. ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டுள்ள உண்மை இது” என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில், “தி.மு.க. ஆட்சியில்தான், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருடைய கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும், முடிவெடுக்கப் பட்டது. 2000ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்ற இந்த சம்பவத்தாலேயே, மூவருடைய கருணை மனுக்களும் தற்போது நிராகரிக்கப் பட்டுள்ளன” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
முதல்வரின் இந்தக் கூற்றைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார், கருணாநிதி.
இவர் என்னதான் சொல்கிறார்? “ஜெயலலிதா தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். நளிளியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தற்கு, தி.மு.க. ஆட்சிதான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா தனது வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மற்றய மூவரின் கருணை மனுக்களையும் தி.மு.க. அரசுதான் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும் சொல்லியிருக்கிறார் அல்லவா, தி.மு.க. அரசு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான், 11 ஆண்டுகளாக அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார் அவர்.
இதில் கூறப்பட்ட முதலாவது விஷயம் லாஜிக்காக பொருந்தி வருகின்றது. ஆனால், இரண்டாவது கூற்றில் லாஜிக் இடிக்கிறதே!
தி.மு.க. அரசு, மூவரின் கருணை மனுக்களை அனுப்பி வைத்தது என்பதை மட்டும் முதல்வர் ஜெயலலிதா கூறவில்லை. அத்துடன், ‘அந்த மனுக்களை நிராகரிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ரெக்கமென்ட் பண்ணியதே தமிழக அரசுதான்’ என்றும் அல்லவா கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு டிப்ஸ். பேசாமல், இப்படி அறிக்கை விடுத்திருக்கலாம்: “மூவரின் கருணை மனுக்களையும் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, அதைக் கிடப்பில் போட்டு வைக்குமாறு கூறியதே நான்தான்.அதனால்தான், 11 ஆண்டுகளாக அதைப்பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை…”
காசா, பணமா… அறிக்கைதானே? சும்மா எடுத்து விடுங்க தலைவா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக