ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலஸ்தீனம் மீது வீற்றோ அதிகாரத்தை பிரயோகிப்போம் : ஒபாமா எச்சரிக்கை



ஐ.நாவின் நிரந்தர உறுப்பினராவதற்கு பாலஸ்தீனம்  முயற்சிக்குமாயின்,  வீற்றோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்த நேரிடும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா கூட்டத்தொடரில் இது பற்றி கருத்து தெரிவித்த அவர், பேச்சுவார்த்தையின் மூலம் முதலில் இஸ்ரேலுடனான சுமூகமான நல் உறவை கட்டியெழுப்பட்டும் என தெரிவித்தார்.

எனினும் வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம் இன்னமும் சிக்கல் நிலை அதிகரிக்க நேரிடும் என பிரான்ஸ் அதிபர் நிகோஸி எச்சரித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை வழங்க கோரி, இன்றைய வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ஐ.நாவுக்கான பாலஸ்தீன தூதுவர் அப்பாஸ் கோரிக்கை மனு ஒன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கையளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று வெஸ்ட் பாங் திடலில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் இடம்பெறுகிறது. பாலஸ்தீன தூதரின் கோரிக்கையை பான் கீ மூன் ஏற்பார் எனில், இவ்விடயம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக