ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தோனேசியாவில் ஷாருக்கானின் மறு அவதாரம்! அதிர்ச்சியில் பொலிஸ் (வீடியோ இணைப்பு)


இந்தோனேசியாவின் Sulawesi மாகாணத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் செய்யும் திருவிளையாடலைப் பாருங்கள்...
ஒரு பொலிஸ்காரர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு இந்தியாவில் ஹிந்தியில் பிரபலமான "தக தெய்ய தெய்ய " பாடலைப் போட்டு விட்டு தானும் உரத்துப் பாடுகிறார்.

பக்கத்திலிருந்த பொலிஸ்காரர் மொபைல் போனை எடுத்து வைத்து நோண்டுகிறார்.
பெரிய ஷாருக்கான் என்ற நினைப்பில் பீல் பண்ணிப் பாடுவதைப் பாருங்கள்.... ஷாருக்கான் கூட இவ்வளவு பீல் பண்ணி பாடினாரோ என்று சத்தியமாக தெரியாது...
ஆனால் இவருக்கு இந்தோனேசியக் காவல் துறையில் வேலை கிடைக்கிறதோ இல்லையோ இந்திய சினிமாவில் நிச்சயம் மிகப் பெரிய இடம் ஒன்று காத்திருக்கின்றது.

இரண்டு பேரும் இந்தோனேசியாவின் முக்கிய பொலிஸ் தலைமையகம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையில் இருந்த போதே மேற்படி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தோனேசியாவும் அடிக்கடி முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக