ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவருக்கு


மிக்க குழப்பத்தில் உள்ள விஜயகாந்த் கட்சி தே.மு.தி.க.வினர், தமது குழப்பத்துக்கெல்லாம் சரியான வழியை கோவை சென்று தேட உத்தேசித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன், தி.மு.க. தனது குழப்பங்களைத் தீர்க்க விஜயம் செய்த அதே கோவைதான், தமது குழப்பங்களுக்கும் விடை கொடுக்கும் என்பது இவர்களது நினைப்பாக உள்ளது.
கோவையில் அப்படி என்ன விசேஷம்? சிறுவாணி தண்ணீரில் ஏதாவது சக்தி உள்ளதா? அதல்ல விஷயம். தே.மு.தி.க.வின் 7ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்,
கோவையில் வரும் 25ம் தேதி நடக்கிறது. அதில்தான், கட்சியின் எதிர்காலம், பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
தி.மு.க. தமது ‘மகள்-மகள்-பேரன்’ சண்டைகளை தீர்த்து வைக்க, சில வாரங்களுக்கு முன்னர்தான் இதே கோவையில், செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடாத்தியிருந்தது. சண்டை தீர்ந்ததாகத் தெரியவில்லை. பாதிக்கூட்டத்தில் அழகிரி கோபித்துக்கொண்டு, மதுரைக்கு விருட்டென்று புறப்பட்டுச் சென்றதுதான் நடந்தது.
இப்போது, தே.மு.தி.க.வினரின் முறை.
இவர்களது கூட்டத்துக்காக கோவையில், கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்துக்கு செல்லும் வழியில் உள்ள இடத்தில், பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. சட்டசபை தேர்தலுக்கு பின், விஜயகாந்த் பங்கேற்கும் முதல் கூட்டமாக இது அமையப் போகின்றது. அத்துடன் கூட்டணி பற்றி முடிவு செய்யும் முக்கிய கூட்டமாகவும் இது இருக்கும் என்கிறார்கள்.
இன்றைய தேதியில் எந்தக் கூட்டணியில் தமது கட்சி உள்ளது என்ற விஷயம், கட்சித் தலைவர் விஜயகாந்துக்கே தெரியாத ரகசியமாக போய்விட்டது. பாவம், அவர்தான் என்ன செய்வார்? ஜெயலலிதாவின் ஆக்‌ஷன்களுக்கு, ரியாக்‌ஷன் கொடுக்கும் நிலையில் அல்லவா இந்தத் தலைவர் உள்ளார்!
ஜெயலலிதாவின் ஆக்‌ஷன்கள், எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களின் பட்டியல்களை ஜெயலலிதா அறிவித்து, விஜயகாந்துக்கு வாசல்கதவை நோக்கி வழிகாட்டியிருந்தார். இன்றோ, நாளையோ அ.தி.மு.க.வின் இறுதிப் பட்டியலும் வெளியாகும் என்று தெரிகின்றது.
இறுதிப் பட்டியலில், மாநகராட்சி, நகராட்சி வார்டு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது. மொத்தத்தில், மேயர் பட்டியலில் தொடங்கி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகி, இப்போது, அடிமட்டப் பதவியான, வார்டு மெம்பர்களின் பெயர்களும் வெளியாகவுள்ளன.
இந்தப் பட்டியலும் வந்துவிட்டால், விஜயகாந்த் கட்சியினர் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவி எதிலும் போட்டியிட இடமில்லை. ஜெயலலிதா தனது பட்டியல்களில் உறுதியாக நின்றால் என்ன ஆகும்?
தே.மு.தி.க.வினர் மாநகராட்சிக்குள் நுழைய வேண்டுமென்றால், மூன்று வழிகள்தான் உள்ளன. முதலாவது வழி, தனித்துப் போட்டியிட வேண்டும். இரண்டாவது வழி, வேறு கூட்டணி அமைக்க வேண்டும். முன்றாவது வழி என்ன? சொன்னால், தே.மு.தி.க.வினர் கோபம் கொள்வார்கள். இருந்தாலும் தே.மு.தி.க.வினர் மாநகராட்சிக்குள் நுழைய  மூன்றாவது வழியை இதோ சொல்கிறோம்.   அந்த வழி…
…மாநகராட்சியில், தோட்டக்காரர் வேலைக்கு அப்ளை பண்ண வேண்டியிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக