கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் விமான நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகித்து வந்த இந்துஸ்தாஸ் பெட்ரோலியம், இன்று அதிகாலையிலிருந்து சப்ளை நிறுத்தி விட்டது. ஆனால் பாரத் பெட்ரோலியம் மட்டும் தொடர்ந்து எரிபொருள் விநியோகித்து கொண்டிருக்கிறது.
இதனால் தனியார் விமான நிறுவனம், டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற முக்கிய உள்நாட்டு விமானங்களையும், கொழும்பு போன்ற சர்வதேச விமானங்களையும் இயக்குகிறது. சென்னையில் இருந்து உள்நாட்டு வழித்தடங்களில் இன்று காலையில் இருந்து இரவு வரை 13 விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது. அந்தமான் விமானம் அதிகாலை 4.20 மணி, கோவை 5.40, பெங்களூர் காலை 7.35, பகல் 12.05, 3.55, மாலை 5.35, திருவனந்தபுரம் காலை 8.35, விசாகப்பட்டினம் காலை 9.40, திருச்சி பகல் 11.45, ராஜமுந்திரி பகல் 1.55, சேலம் பகல் 2.50, மதுரை பகல் 3 மணி, கொச்சி இரவு 8 மணி ஆகிய விமான சர்வீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, ‘விமானங்களில் இயந்திர கோளாறு. அதனால் சர்வீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. உங்களது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது நாங்களே வேறு விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்Õ என்று அந்த தனியார் விமான நிறுவனம் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது. ஆனாலும் ஒரே நாளில் 13 விமான சர்வீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக