ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2ஜி ஸ்பெக்ட்ர கைதுப் பட்டியலில் உருளப் போகும் அரசியல் பெரும் தலைகள்

twog_12_2
 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தயாநிதி மாறன் மீது சிபிஐ விரைவில் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
அடுத்த மாத துவக்கத்தில் இந்த எப்ஐஆர் தாக்கலாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் விவகாரத்தில் அதன் முந்தைய உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அவரை நிர்பந்தித்ததாகவும், அவர் அதை மேக்சிஸ் விற்ற பின் ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியதாகவும் தயாநிதி மீது புகார் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் கிடைத்த பிறகு மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் திட்டத்தில் பல நூறு கோடிகளை முதலீடு செய்தது.

இது தொடர்பாக சிவசங்கரன், தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

அதே நேரத்தில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி மீது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் புகார்களுக்கு ஆதாரமில்லை என்று சிபிஐ கூறுகிறது.

ஆனால், அவருக்கு முன் அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனின் பங்கு குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக