ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு




சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் அப்பீல் தொடர்பாக  இரண்டு வாரங்களாக நடந்த இறுதி விசாரணை கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு,  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பது என்றும், பழைய பாடத்திட்டத்தை தொடர்வது என்றும் அறிவித்தது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாட திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம்,  சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி நிபுணர்களின் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதிய அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், 1 முதல் 10-வது வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த மாதம் 22-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகத்தை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பையும் எதிர்த்து தமிழக அரசு கடந்த மாதம் 19-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும்,  அடுத்த மாதம் 2-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த  மாதம் 22ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை 26ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.
அதன்படி, சமச்சீர்க் கல்வி தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்கள் நடந்தபின் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தனர். அதேநேரம் சமச்சீர் கல்வி பாட நூல்களை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் வழங்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்..
இந்நிலையில் சமச்சீர்க் கல்வி வழக்கில் இன்று காலை 10.34 மணிக்கு நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பை வழங்கியது.
நீதபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சமச்சீர்க் கல்வியை இன்னும் 10 நாட்களுக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 1 முதல் 10ம் வகுப்புவரை சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப் படுகிறது.
இது தொடர்பான 25 காரணங்களை ஆய்வு செய்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக