ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ச்சைக்குரிய இந்திய வரைபடம் திரும்ப பெற்றது ஆஸ்திரேலியா!

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய குடியுரிமை துறை சார்பில் அதன் வெப்சைட்டில், இந்தியாவின் வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் எல்லை மாநிலங்களான காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இல்லாமல் வெளியிடப்பட்டது. இதற்கு அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுவதும்
போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வரைபடத்தை ஆஸ்திரேலியா திரும்ப பெற்றுள்ளது. அந்த வரைபடம் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெறப்பட்டதாகவும், எந்த விவரங்களும் குறிப்பிடாமல் தவறுதலாக வெப்சைட்டில் வெளியிடப்பட்டதாகவும் குடியுரிமை துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சிட்னியை சேர்ந்த சிஐஏ என்ற வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்பின் தலைவர் யாது சிங் கூறும்போது, ‘ஆஸ்திரேலிய இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, குடியுரிமைத் துறை பொறுப்புடன் செயல்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக