ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு! முதல் அடி ஜெயலலிதாவிற்கு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அப்பீ¦ல் மனு, இன்று விசாரணைக்கு வந்தது
. மாநில அரசின் கல்வித் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்ட்டல் பாடத்திட்டங்கள் ஆகிய 4 பாடத்திட்டங்களுக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. 1 மற்றும் 6ம் வகுப்புகளில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டத்தை தயாரித்து புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், புதிதாக பதவி ஏற்ற அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து கடந்த வாரம் சட்ட திருத்த கொண்டு வந்தது. இதனால், இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பழைய பாடத்திட்டத்தைக் கொண்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் தொடங்கியது.

இதற்கிடையே, அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோன்மணியம் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், ‘சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை நிறுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறி, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு தடை விதித்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீட்டு மனு செய்யப்பட்டது. மனுவில், ‘சமச்சீர் கல்வியில் தரம் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு இந்த கல்வித் திட்டத்தை செயல்படுத்த முடியாது. அதனால், அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை நீதிமன்றம் தொடங்கியதும் விடுமுறை கால நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, நீதிபதிகளின் முன்னிலையில், தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, “தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 15ம் தேதி திறக்க இருப்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினர். அதைக் கேட்ட நீதிபதிகள், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமச்சீர் கல்வி இந்த ஆண்டும் 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு அமலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்த தனிக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தக் குழு 3 நாளுக்கு ஆய்வுக்கு பின் உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை ஒப்படைக்க உள்ளது. இதன் படி மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக