ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எரிவாயு தோண்டி எடுப்பதில் ரிலையன்சுக்கு சலுகை-நாட்டுக்கு பெரும் நஷ்டம்



Oil Platform
டெல்லி: இந்தியாவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் 3 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏராளமான சலுகைகளைக் காட்டி வருவதாகவும் இதனால் நாட்டுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் மத்திய தணி்க்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைத் துறை தாக்கல் செய்த அறிக்கையால் தான் அந்தப் பிரச்சனையே வெளியில் பெரிய அளவில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட பலர் சிக்கினர்.

இந் நிலையில் கச்சா எண்ணெய் மோசடியை தணிக்கைத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல பகுதிகளில் குறிப்பாக கடலுக்கடியில் ஏராளமான கச்சா எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் இருப்பு உள்ளது. ஆனால், இதைக் கண்டுபிடித்து தோண்டி எடுக்க வேண்டிய மத்திய அரசும், அதன் முக்கிய எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சியும் நீண்டகாலமாக அமைதி காத்து வந்தன.

அதே நேரத்தில் இந்த கச்சா எண்ணெய், எரிவாயுவை தோண்டி எடு்க்க சில ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஆந்திர கடலோரம் உள்ளிட்ட பல பகுதிகளை குத்தகைக்கு எடுத்து எரிவாயு, எண்ணெய் தோண்டி எடுக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியுள்ளது. இதை மத்திய அரசும் அனுமதித்துள்ளது. இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வளவு இழப்பு என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம் என்றும் தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் அவ்வப்போது தனது முதலீட்டுத் திட்ட அறிக்கையை மாற்றிக் கொண்டே வருவதாகவும், அதை மத்திய அரசும் அமைதியாக அனுமதித்து வருவதாகவும், இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தணிக்கைத்துறை அறிக்கை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக