ஆரம்பமே இப்பதாணு நினைப்போம்
. கடந்த சில நாட்களாக சென்னையில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் நள்ளிரவில், மதுபானக் கடைகள், ஓட்டல்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதன்பின் திறந்திருக்கும் கடைகளை மூடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் திறந்திருக்கும் கடைகளை போலீசார் மூடச் சொல்லி வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரெஸ்டாரன்ட் திறந்திருந்தது. அப்போது அந்த வழியாக தி.நகர் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ரோந்து வந்தார். ரெஸ்டாரன்ட் முன்பு கூட்டம் நிற்பதைப் பார்த்து தனது காரை நிறுத்தியுள்ளார்.
Ôஓட்டலை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள்? உடனே மூடுங்கள்Õ என கூறியுள்ளார். ஓட்டலுக்கு வெளியே ஆயிரம் விளக்கு அதிமுக பகுதிச் செயலாளர் நுங்கை மாறன், சதாசிவம் உள்பட அதிமுகவினர் 7 பேர் நின்றிருந்தனர். அப்போது, Ôஇரவில் ஏன் கூட்டமாக நிற்கிறீர்கள். உடனடியாக கலைந்து செல்லுங்கள்Õ என்று துணை கமிஷனர் திருநாவுக்கரசு கூறியுள்ளார். இதையடுத்து அதிமுகவினருக்கும் போலீஸ் துணை கமிஷனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், துணை கமிஷனருடன் வந்த அதிரடிப்படை போலீசார், அதிமுகவினர் மீது தடியடி நடத்தினர். பின் 7 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீஸ் ஸ்டேஷனில், துணை கமிஷனர் தங்களை தாக்கியதாக நுங்கை மாறன், சதாசிவம் ஆகியோர் புகார் கொடுத்தனர். இந்த தகவல் பரவியதும், அதிமுகவினர் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து, அமைச்சர் செந்தமிழன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ வளர்மதி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்தனர். போலீசாருடன் அவர்கள் சமரசத்தில் ஈடுபட்டனர். இணை கமிஷனர் சங்கர் வந்து விசாரணை நடத்தினார். அதிமுகவினர் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு, நுங்கை மாறன் உட்பட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் அவர்கள் தனியார் மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றனர்.
நள்ளிரவில் போலீசாருடன் அதிமுக பிரமுகர் தகராறில் ஈடுபட்டதும், அமைச்சர், எல்எல்ஏ வந்து சமரசம் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ôபோலீஸ் நிலையங்களுக்கு அதிமுகவினர் செல்லக் கூடாதுÕ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் துணை கமிஷனருடன் அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக