மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

இந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை, மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். டெல்லியில் நடந்த அகில இந்திய ஹஜ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்
.
ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4-வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என்றார். மேலும் ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக