ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களும் ஈடுபடும் பயங்கரம் ஆபத்தான ஆசனவாய் கடத்தல்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: ஆசனவாய் மூலமாக நகைகள், ரத்தினக் கற்கள் போன்றவற்றை கடத்துபவர்களுக்கு குடல் புண், வயிற்று வலி ஏற்படும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர்.

வெளிநாடுகளில் இருந்து தங்க பிஸ்கட், வைர கற்கள் போன்றவற்றை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இவ்வாறு கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த கடத்தில் பெண்களும் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
முதலில் கடத்தப்பட வேண்டிய நகை, ரத்தினக் கற்கள் போன்றவற்றை ஆணுறையில் நிரப்பி நூல் போன்றவற்றால் கட்டுகின்றனர். இதை ஆசனவாய் வழியாக உள்ளே திணித்து கடத்துகின்றனர். வாய் வழியாக என்றால், ஆணுறையை தேனில் நனைத்து விழுங்க செய்கின்றனர். 48 மணி நேரத்தில் எளிதாக வெளியே வந்து விடும். இனிமா கொடுத்தால் உடனே வந்துவிடும் என்பதால் கடத்தலுக்கு இம்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உயிருக்கு ஆபத்து இல்லை. என்றாலும், வயிற்றுவலி, குடலில் புண் போன்ற கோளாறு உள்ளவர்கள் இவ்வாறு செய்தால் தீராத பிரச்னைகளை ஏற்படுத்தும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுக்குள் ஆணுறை எதிர்பாராதவிதமாக கிழிந்தால், கடத்தல் பொருட்கள் வெளியேறி, குடலை அறுத்துவிடும் அபாயமும் இருக்கிறது.  ஆபத்து இல்லை என்று கருதி பெண்களும் இத்தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக