ஆனால், அவற்றை பொய்யாக்கும் வகையில் தாங்குதல் நடைபெறும் இடத்திலேயே சந்திப்புக்களை நடத்தியுள்ளார் கடாபி.லிபியா மீதான நேட்டோவின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் தலைநகர் திரிப்பொலிக்குச் சென்று கேணல் முவம்மர் கடாபியுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகொப் ஜுமா. மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இது என்றபோதும், தலைநகர் திரிப்பொலியில் நேட்டோவின் கடுமையான தாக்குதல் நடைபெறும் நிலையில் மேற்கொண்ட பயணமாக இது இருக்கின்றது. இவரது பயணத்திற்கு முன்பாக இவரது ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் நேட்டோவின் குண்டுத் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக