லண்டன்: ஈரான், துருக்கி நாடுகளை சேர்ந்த பிரபல உணவு வகை ‘கபாப்’. நம்மூர் கிரில் சிக்கன் போல இறைச்சித் துண்டை சுட்டு அதனுடன் மசாலா, வாசனை பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு. இங்கிலாந்தை சேர்ந்த சமையல் கலைஞர் ஆண்டி பேட்ஸ் என்பவர் சூப்பராக ஒரு கபாப் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். பொன்னிறத்துக்கு சுடப்பட்ட இறைச்சியுடன் மைதா ப்ரெட், குங்குமப்பூ, பால், முந்திரி, பிஸ்தா, பாதாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் இதில் உண்பதற்கு ஏற்ற வகையில் தங்க துருவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மேல்புறம் வெள்ளரி, யோகர்ட், புதினா, ஷாம்பெயின் மது ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 750 பவுண்டு (ரூ.54 ஆயிரம்). உலகிலேயே காஸ்ட்லியான கபாப் என்று இது சாதனை படைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக