ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரை: தி.மு.க., வை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவருக்கு மாநகராட்சி இடத்தை ஆக்கிமிரத்து கொள்ள உதவி செய்தமைக்காக மதுரை தி.மு.க., மேயர் தேன்மொழி மற்றும் துணைபோன கமிஷனர், நகரமைப்பு அலுவலர் 



ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மதுரை மேயராக இருந்து வருபவர் தேன்மொழி. இவரது கணவர் கோபிநாதன். தி.மு.க.,வில் தனக்கென மதுரை மாவட்டத்தில் முழு செல்வாக்கு பெற்றவர். 
என்ன குற்றம் செய்தார் மேயர் ? தேன்மொழி மேயராக பொறுப்பேற்றதும் கட்சியின் தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேயர், கமிஷனர் சிக்னல் காரணமாக சர்வேயர் குருசாமியிடம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தான் வழக்கின் சாராம்சம்.
இது தொடர்பாக லஞ்ச போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட் கடந்த 14 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாக இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். 

இந்த உத்தரவின் படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக