ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது; 44 பேர் பலி



ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியது; 44 பேர் பலிரஷியாவின் டியூப்லோவ்-134 ரக பயணிகள் விமானம் மாஸ்கோ டொமோ தெதோவோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெட்ரோஷாவோட்ஸ்க் நகருக்கு வந்தது. அதில் 52 பயணிகள் இருந்தனர். அவர்களில் 9 பேர் விமான ஊழியர்கள்.
விமானத்தை பெட்ரோஷாவோட்ஸ்கில் உள்ள பேசோவெட்ஸ் விமான நிலையத்தில் தரை இறக்க விமானி முயற்சித்தார். அப்போது அங்கு கடுமையான மூடுபனி இருந்தது.
 
இந்நிலையில், 1 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் இந்த விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது. கரும்புகையுடன் நெருப்பு பந்து போன்று எரிந்தது.
 
பெட்ரோஷா வோட்ஸ்க் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் 44 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆண்டன் என்ற 10 வயது சிறுவன் உள்பட 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
விபத்துக்குள்ளான டியூப் லோவ்-134 ரக விமானம் கடந்த 1967-ம் ஆண்டு சோவியத் ரஷியாவால் தயாரிக்கப்பட்டது. சமீப காலமாக இது அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டு (2010) ஏப்ரலில் போலந்து அதிபர் லெக்காக்ஷின்ஸ்கி இந்த ரக விமானத்தில்தான் ரஷியா வந்தார். ஸ்மோலென்ஸ் விமான நிலையம் அருகே வந்த போது விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் அதிபர் லெக்சாக்ஷின்ஸ்கி அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 96 பேர் பலியாகினர்.
 
எனவே, டியூலெவ்-134 ரக விமானங்களில் ஏற்படும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று விபத்து நடந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளர். அதன் மூலம் இந்த விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக