ஒரு கட்டிடத்தின் எட்டாவது மாடியின் பெல்கனிப் பகுதியில் இருந்து தவறி விழுந்த மூன்று வயதுச் சிறுவன் அதிசயிக்கத்தக்க வகையில் ஏர்கண்டிஷன் சாதனத்தின் இடையில் சிக்கி உயிர் தப்பினான்.
சீனாவின் பீஜிங் நகர வீடமைப்பு அடுக்குமாடித் தொடரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.இந்தச் சிறுவனின் பெயர் என்ன வென்பது குறிப்பிடப்படவில்லை.
ஆனால் சம்பவம் நடந்தபோது இந்தச் சிறுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.பெல்கனியில் இருந்து தவறி விழுந்து ஏர்கண்டிஷன் சாதனத்தின் இடையில் சிக்கிக் கொண்ட இந்தச் சிறுவன் கதறும் சத்தம் கேட்டு அயலவர்கள் வெளியில் வந்து பார்த்தபோதே விடயம் தெரியவந்தது.
ஏர்கண்டிஷனின் இடையில் சிக்கியிருந்த சிறுவன் அதிலிருந்து மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருப்பதையும் அயலவர்கள் அவதானித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரைக் காத்திருக்காமல் அயலவர்களே சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.
அந்தக் கட்டிடத்தில் தங்கியுள்ள வேங் மற்றும் சூ ஆகிய இருவரும் துணிச்சலாகவும்,அவதானமாகவும் செயற்பட்டு சிறுவனை மீட்டனர்.எட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை ஏழாவது மாடியில் இருந்தவர்கள் மீட்கும் காட்சியை பலர் மெய்சிலிர்க்க பார்த்துக் கொண்டிருக்க ஒருவர் எல்லாவற்றையும் தன் கமராவிலும் பதிவு செய்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக