ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பொள்ளாச்சி பஸ் கவிழ்ந்தது : 22 பயணிகள் உயிருடன் கருகினர்!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வேலூர்: காவேரிப்பாக்கம் அருகே தனியார் பஸ், பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் தீப்பிடித்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 22 பயணிகள் உயிருடன் கருகி பரிதாபமாக பலியாயினர். சென்னையில் இருந்து நேற்று இரவு 8.45 மணியளவில் தனியார் பஸ் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் டிரைவர் மற்றும் 23 பயணிகள் இருந்தனர். இரவு 10.45 மணியளவில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் சேலத்தை சேர்ந்த நாகராஜ், பஸ்சை இடது புறமாக திருப்பினார்.


அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. பஸ்சில் தீ மளமளவென பரவியது. பஸ் விபத்தில் சிக்கியதும், தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர். பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு நொறுங்கியதால், பயணிகளால் தப்பிக்க முடியவில்லை. பஸ் முழுவதும் தீப்பிடித்ததால், யாரும் வெளிவர முடியவில்லை. அதனால் பயணிகள் பஸ்சுக்குள் சிக்கி அலறினர். அதற்குள் மளமளவென தீ பரவி பஸ் முழுவதும் பற்றி எரிந்தது. ஒருவர் மட்டும் பஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உயிர் தப்பி வெளியே குதித்தார். மற்றவர்கள் அனைவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ராணிப்பேட்டை மற்றும் அருகில் இருந்த தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் வீரர்கள் சென்றனர். போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  உயிர் தப்பியவர் சென்னை முகப்பேர் கார்த்திக் ராஜா என்பது தெரிய வந்தது. அவரை தவிர மற்ற அனைத்து பயணிகளும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி இறந்தனர். டிரைவர் நாகராஜ் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந் துள்ளார்.

தகவல் அறிந்ததும் வேலூர் கலெக்டர் நாகராஜன், டிஐஜி ஜெயராம், அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பலி உயர்வு ஏன்?: விபத்தில் சிக்கியது ஏ.சி வால்வோ பஸ். ஏ.சி.க்காக கதவுகள், ஜன்னல்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. கதவை யாரும் திறக்க முடியாது. டிரைவர் நினைத்தால் மட்டுமே பட்டனை அழுத்தி கதவை திறக்க முடியும். பஸ்சின் முன்பக்கம் மட்டும்தான் கதவு இருக்கும். பின்பக்கம் கதவு இருக்காது. ஆனால், எமர்ஜென்சி ஜன்னல் இருக்கும். அதுவும் கண்ணாடியில் மூடப்பட்டிருக்கும். விபத்து போன்ற அவசர காலங்களில் அந்த வழியாக ஒவ்வொருவராக மட்டுமே வெளியில் செல்ல முடியும். இதுபோன்ற காரணங்களால் பயணிகளால் தப்பிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

பஸ்சில் பயணம் செய்தவர்கள் விவரம்

விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணம் செய்தவர்கள், டிக்கெட் முன்பதிவின் போது கொடுத்திருந்த விவரங்கள்.
பொள்ளாச்சிக்கு செல்ல இருந்தவர்கள்:
1. வெங்கடேசன் (21) 98432 78484
2. விஜயகுமார் (21)
3. வேல்சாமி (22)
4. சக்திவேல் (24)
5. திவ்யா (23), 96000 97350
6. செந்தில்குமார் (25) 97500 07150
7. செந்தில்குமார் (25)
8. சுதா, 97917 16055
9. செந்தில்நாதன், 97894 88077
10. வீரையன்,
11. சுப்பிரமணியன் (29), 90030 91193
திருப்பூர் செல்ல இருந்தவர்கள்:
12. வெங்கடேஷ் 96001 35576
13. செல்வராஜ் (24)
14. கார்த்திக் ராஜா (22)
15. கார்த்திக் ராஜா
16. ஜெபராணி (28)
17. விஜயலட்சுமி மற்றும் 3 பேர் பயணம் செய்துள்ளனர். (உடுமலைப்பேட்டை)
சென்னையை சேர்ந்த என்.கார்த்திக் (22) என்பவர் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து திருப்பூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நண்பர்களுடன் அவர் செல்லவில்லை. ஆனால், அவருக்கு பதில் அவருடைய இருக்கையில் கடைசி நேரத்தில் பதிவு செய்யாத வேறு 3 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வேலூரை சேர்ந்த 4 பேர், வேலூரில் இருந்து திருப்பூர் செல்வதற்காக இதே பஸ்சில் முன்பதிவு செய்திருந்தனர். தாமரை மற்றும் 4 பேர் வேலூரில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். இப்போது வேலூருக்கு முன்னதாகவே விபத்து நடந்ததால், இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக