லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் (95) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இந்தியாவை சேர்ந்த பிரபல ஓவியர் எம்.எப்.உசேன். மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூரில் 1915ம் ஆண்டு பிறந்தார். இவரது ஓவியங்கள் மிகவும் பிரபலம் அடைந்ததால், இவர் இந்தியாவின் பிகாசோஎன அழைக்கப்பட்டார். பல நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினார். இவரது பல ஓவியங்கள் அதிக தொகைக்கு ஏலம் போயின. இவரது திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கியது. 1986ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இவர் தயாரித்த Ôத்ரூ த ஐஸ் ஆஃப் எ பெயின்டர்ÕÕ படம் பெர்லின் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருது பெற்றது. பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், அம்ரிதா ராவ் உள்பட தனக்கு பிடித்த பல நடிகைகளின் ஓவியங்களையும் இவர் வரைந்துள்ளார். இந்து கடவுள்கள் மற்றும் பாரத மாதா பற்றி இவர் 1970ம் ஆண்டுகளில் வரைந்த ஓவியங்கள், 1996ல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து எம்.எப். உசேன் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதால், இவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். இவருக்கு கத்தார் அரசு குடியுரிமை வழங்கியது.
உடல் நிலை குன்றியதால், லண்டனில் உள்ள ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இவர் கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இன்று காலை மாரடைப்பால் அவர் இறந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக