பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய நடைமுறைகளை பாடம் எடுக்கும் ஆசிரியருக்கான நேர்முகத்தேர்வுக் குழு முன்பாக இந்தியாவை சார்ந்த பள்ளிக்கூட முதன்மை ஆசிரியர் காழ்ப்புணர்வுடன் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரை அவமதித்துள்ளார்.
கடந்த வாரம் இதர ஆசிரியர்களின் முன்பாக நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள வந்த நபரிடம் தேவையற்ற கேள்வியை கேட்ட முதன்மை ஆசிரியரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாக ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதன்மை ஆசிரியர் நபிகளாரை அவமதித்த செயலை துபாய் பள்ளிக்கூட ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் வேளையில் நிர்வாகம் இவரை உடனடியாக வெளியேற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக