ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குஜராத் & மோடி - ஊழல் # 1 :- அன்னா ஹசாரேவின் அந்தர் பல்டி


அன்னா ஹசாரே என்ற முதியவர் சென்றமாதம் 'பிறந்தவர்' ஆவார்..!

திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் இதற்கு முன்னர்  நடந்துள்ளன. அப்போதெல்லாம் இவர் ஏதும் உண்ணாவிரதாமோ, ஊர்வலமோ, அறிக்கையோ இப்படி எந்த செய்தியுமில்லை. அதற்கு முன்னர்வரை நம்மில் யாரும் அவரை அறிந்திருக்கவுவில்லை. 


சரி, போகட்டும். புத்தருக்கு இளம் வயதில் ஞானோதயம் வந்ததாக நாம் படித்ததுண்டு. இவருக்கு முதிய வயதில் வந்திருக்கிறது..!  பலர் இவரை பாராட்டினர். சிலர், இவரின் லோக்பால்... 'அரசியல்வாதிகளின் ஊழலை ஒழித்துவிடாது' என்றும், 'இவர் கோரிக்கையானது, ஊழலை ஒழிக்கவேண்டிய முறையில் அடிப்படை காரணிகளை கண்டறிந்து வேரிலிருந்து ஊழலை ஒழிக்காமல், நுனிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது' என்றும் கூறினர். விஷயம் நியாயமான கண்ணோட்டம் என்பதால், அதற்கும் ஆதரவு தெரிவித்தனர் பலர்.

எனினும்ஊழலை எதிர்ப்பது என்ற விஷயம் நன்மையானதே. ஆதலால் இவரை ஆதரிப்போம். இப்படித்தான் பெரும்பாலும் எல்லாருமே இவரை ஆதரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில்தான்... இவரிடமிருந்து ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை வந்தது..!

அவரின் "லோக்பால் மசோதாவுக்கான உண்ணாவிரதம் ப்ராஜெக்ட் 'மெகா ஹிட்' ஆனதை தொடர்ந்து, அதன் அறுவடையை, 'காங்கிரசின் எதிர் அரசியல் களத்தில்' பெற நாடிவிட்டாரோ இவர்?" என்று அனைவரும் நினைக்கும்படி, 'காந்தியவாதியான' அன்னா ஹசாரே ஒரு அதிரடி அறிக்கை விட்டார். அதாவதுஹிந்துத்துவா பயங்கரவாதி என்று இகழப்படும்... குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை இகழ்  நரேந்திர மோடியைத்தான் "சிறந்த முதல்வர்" என்றும், அவருடையது "அருமையான ஆட்சி" என்றும் சென்ற மாத இறுதியில் புகழாரம் சூட்டினார் அன்னா ஹஸாரே.


காவிகள் பலர் அவரை மெல்ல சூழ ஆரம்பித்தனர். உடனேயே அவர், 'அடுத்த தேர்தலில் பாஜக-வில் சீட் வாங்கிவிடுவார்' போன்று தோன்றியது. அதேநேரம், அவருக்கு தோள் கொடுத்த பல நடுநிலையாளர்கள் அவரை விட்டு ஓடலாயினர். 


ஊழலுக்கு எதிரான சொற்பொழிவாற்ற அன்னா ஹசாரேவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடாகி இருந்தது. அதில், பல அதிரடி அறிக்கைகளை குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி மக்களுக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். அவை ஒன்றன் பின் ஒன்றாய் கீழே வருகின்றன.
.
.
  • மஹாத்மா காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ, அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்..? 
  • ஒரு நாளைக்கு குஜராத்தில் 4.5 கோடி ரூபாய்க்கு பால் விற்பனை. ஆனால்,  6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை...! குஜராத்தில் பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது.
  • அஹ்மதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது.
  • குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரணமதுவிலக்கு(!) அமலில்(?) உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச்சாராயத்துக்கும் பிரபலம் ஆகிவிட்டது..!
  • லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்து, பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்த போதுதான் நரேந்திர மோடியை குறித்தும் குஜராத் மாநிலத்தை குறித்தும் அறிய முடிந்தது.
  • இவரை பற்றியா நான் சென்ற மாதம் பாராட்டினேன்?  
  • முதலில், இந்த முதல்வர் மோடி, தன் மாநிலத்தில் லோகாயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.
  • பின்னர் இவர்  நேர்மையானவராய் கிராம சபைக்கு அதிகாரம் தர வேண்டும்.
  • நாட்டில், குஜராத்தில்தான்  ஊழல் அதிகம் என்று, நான் இங்கே வந்த பிறகுதான் நேரில் பார்த்த பிறகுதான்  தெரிகிறது.  மஹாத்மா மண்ணில் ஊழல்..!
  • என்னுடைய ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் வெற்றி கண்டவுடன், எனது அடுத்த போராட்டம் குஜராத்தை நோக்கியேதான் அமைந்திருக்கும். 


இனியாவது ஹிந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிக்கைகளின் பொய் செய்திகளை நம்பி "குஜராத்தில் முனேற்றம்"... "மோடியின் அருமையான ஆட்சி"... என்றெல்லாம் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்தை நேர்மையானவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், அன்னா ஹசாரேவை போல பின்னால் மேற்படி உண்மைகளை அறியவரும் போது மூக்குடைபட்டு வருத்தப்பட நேரிடலாம்.

ஹிந்துதுவா பயங்கரவாத்தைதையும், பாஜக பாசித்தையும், அரசியல்வாதிகளின் ஊழலையும் ஒழித்து நம் நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த முயல்வோரை நாம் முதலில் இனங்காணுவோம். அவர்களை ஆதரிப்போம். நம் நாட்டு நன்மைக்காக. நம் சந்ததிகளின் எதிர்கால நன்மைக்காக.

டிஸ்கி : 

இதில் இன்னொரு விஷயம்..! தங்களை 'நடுநிலையாளர்கள்' என்று சொல்லிக்கொண்டவர்கள், மோடியை அண்ணா ஹசாரே புகழும்போது முதல் பக்கத்தில் செய்தியையும் இவரையும் போட்டு தமிழில் புளங்காகிதம் பூண்டார்கள். ஏனோ, இப்போது அவர்களை காணவில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக