ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அசாம் கோரச்சம்பவம்; 2 விபத்துக்களில் 40 பேர் பலி;மணமகனை அழைத்து சென்றபோது துயரம்


கவுகாத்தி: அசாமில் இன்று காலையில் நடந்த இரு வேறு விபத்துக்களில் சிக்கி 37 பேர் பலியாகிவிட்டனர். பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்சில் இடிபாடுகளில் சிக்கியவர்கள், மற்றும் ஆயில் டேங்கருடன் பஸ் மோதியதில் பலர் தீக்காயங்களுடனும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். திருமண விஷேடத்திற்கு சென்றவர்களும், மற்றொரு காரில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளும் இறந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குழந்தைகள்- பெண்கள் பலி: கவுகாத்தியிலிருந்து திகு நோக்கி ஒரு பஸ் மலைஇடுக்குகள் இணைக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. ஹஜோ கவுகாத்திரோடு சொரபாரி என்ற இடத்தில் செல்லும் போது டயர் பழுதாகி பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கவுகாத்தியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் இந்த பஸ்சில் பயணித்தனர். மணமகனை அழைத்து மணமகள் இல்லத்திற்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. மணமகன் நபாகுமார் சர்மா இவரது பெற்றோர்கள் நண்பர்கள் உயிரிழந்து விட்டனர். குழந்தைகளும், பெண்களும் அதிகம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மரப் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தாக்கில் ( நீ‌ரோடை) கவிழ்ந்தது என நேரில் பார்த்த கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். 6 பேரை உயிருடன் மீட்டனர் ஏனையோர் நீரில் மூழ்கி பிணமாயினர். இந்த பஸ்சில் 40 பேர்இருந்தனர். இன்னும் சில‌ரை தண்ணீரில் தேடும் பணி தொடர்கிறது.

மற்றொரு விபத்தில் தீ பிடித்த பஸ் : காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும் - ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பஸ்சும் ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு வேறு சம்பவங்கள் ஒரே மாநிலத்தில் நடந்து 30 க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி அசாமில் நடக்கும் விபத்துக்கள்: அசாம் மாநிலத்தை பொறுத்தவரை வனம் மற்றும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதாகவும், மோசமான ரப் டிரைவிங் மற்றும் அநுபவம் இல்லாத டிரைவர்கள் ஒட்டுவது உள்ளிட் காரணங்களினால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அசாமில் ஆண்டுக்கு 5 ஆயிரம் விபத்துக்கள் நேரிடுவதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக