நெஸ்ட்லே பாஸ்தாவில் குதிரை இறைச்சி! ஒப்பந்தங்கள் ரத்து.
உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, "நெஸ்ட்லே' தயாரிப்புகளில்,
குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நெஸ்ட்லே
நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து
பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. கலப்பட உணவுப் பொருட்கள் பற்றிதான்
இப்போது அதிகமாக அடிபடுகிறது.
மாட்டிறைச்சி பர்க்கரில் குதிரை
இறைச்சி கலப்பு என்பது போய் இப்போது பிரபலமான நெஸ்ட்லே நிறுவனத்தின்
தயாரிப்பான பாஸ்தாவில் குதிரை இறைச்சி 1 சதவிகிதம் கலந்துள்ளது டி.என்.ஏ
டெஸ்ட் மூலம் தெரியவந்தது.
முதலில், இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த, நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக